Wednesday, July 27, 2011

சாகித்ய அகாதமி விருது : நவீன தீண்டாமை?
நேற்று ( 26.07.2011) மாலை சென்னை அருங்காட்சியகத்தில் முனைவர் கே.ஏ.குணசேகரனின் கவிதைநூல் வெளியீட்டு விழா. அதில் நான் தலைமை வகித்தேன். இப்போது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கே.ஏ.ஜி அவர்கள் நாட்டுப்புற இசைக் கலைஞராகவும் நவீன நாடகக்காரராகவும் நன்கு அறிமுகமானவர். இன்று நாட்டுப்புற இசை அரங்கில் கோலோச்சிக்கொண்டிருக்கும் சின்னப்பொண்ணு, ஜெயமூர்த்தி  முதலானவர்கள் இவரது சீடர்கள்தான்.

நான் பேசியபோது சாகித்ய அகாதமி விருதுகள் குறித்து ஒரு செய்தியைப் பதிவு செய்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் இதுவரை ஒருமுறைகூட தலித் எழுத்தாளர் ஒருவருக்கு அவ்விருது வழங்கப்பட்டதில்லை. சாகித்ய அகாதமி விருதுகள் பற்றி விமர்சிக்கும் ’முற்போக்கு’ எழுத்தாளர் முதல் ’பிற்போக்கு’ எழுத்தாளர் வரை இந்த விஷயம்குறித்து இதுவரை எவரும் வாய் திறந்ததில்லை.

1955 ஆம் ஆண்டு தொடங்கி வழங்கப்பட்டுவரும் இந்த விருது இடையில் (தகுதியான எழுத்தாளர் இல்லை என்ற காரணத்தால்?)  ஐந்து ஆண்டுகள் கொடுக்கப்படவில்லை. அதைக் கழித்துவிட்டால் ஐம்பதுபேர் இதுவரை இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.இந்த விருதைப் பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்களில் எந்தெந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.சரி , அவர்கள்தான் தமிழைக் காப்பாற்றியவர்கள் என்று நாமும் ஏற்றுக்கொள்வோம்.ஆனால் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளில் ஒரு தலித்கூடவா தமிழ் இலக்கிய உலகில் தென்படாமல் போய்விட்டார்கள்? இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களைவிடச் சிறந்த படைப்புகளைத் தந்த குறைந்தபட்சம் பத்து தலித் எழுத்தாளர்களாவது தமிழ்நாட்டில் இருப்பார்கள். பின் ஏனிந்த புறக்கணிப்பு? கேட்பதற்கு நாதியில்லை என்பதால்தான் இப்படியான நவீன தீண்டாமை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சனையை எழுப்புவதால் விருதுகளிலும் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள் என்று யாரேனும் விமர்சிக்கக்கூடும். நாம் கேட்பது இட ஒதுக்கீடோ சலுகையோ அல்ல. அரசு சார்பில் வழங்கப்படும் இத்தகைய விருதுகளில் ஒரு ஜனநாயகத் தன்மை இருக்கவேண்டும் என்பதைத்தான் நாம் சுட்டிக்காட்டுகிறோம். மனசாட்சி உள்ளவர்கள் அதை உணர்வார்கள்.


YearWorkAuthor
1955Tamil Inbam (Essays)R. P. Sethu Pillai
1956Alai Osai (Novel)Kalki Krishnamurthy[3]
1958Chakravarti Tirumagan (Ramayana retold in prose)C. Rajagopalachari
1961Agal Vilakku (Novel)Mu. Varadarajan
1962Akkarai Cheemaiyil (Travelogue)Somu (Mi. Pa. Somasundaram)
1963Vengaiyin Maindhan (Novel)Akilan (P.V. Akilandam)
1965Sri Ramanujar (Biography)P. Sri Acharya
1966Vallalar Kanda Orumaippadu (Biography)M. P. Sivagnanam (Ma. Po. Si.)
1967Virar Ulagam (Literary criticism)K. V. Jagannathan
1968Vellai Paravai (Poetry)A. Srinivasa Raghavan
1969Pisirantaiyar (Play)Bharatidasan[3]
1970Anbalippu (Short stories)Ku. Alagirisami[3]
1971Samudaya Veedhi (Novel)Na. Parthasarathy
1972Sila Nerangalil Sila Manithargal (Novel)D. Jayakanthan
1973Verukku Neer (Novel)Rajam Krishnan
1974Thirukkural Needhi Illakkiyam (Literary criticism)K. D. Thirunavukkarasu
1975Tharkkala Tamizh Illakkiyam (Literary criticism)R. Dhandayudham
1977Kuruthip Punal (Novel)Indira Parthasarathy
1978Pudukavithaiyin Thottramum Valarchiyum (Criticism)Vallikannan
1979Sakthi Vaithiyam (Short stories)Thi.Janakiraman
1980Cheraman Kadali (Novel)Kannadasan
1981Puthiya Urai Nadai (Criticism)M. Ramalingam
1982Manikkodikalam (Literary history)B. S. Ramaiya
1983Bharathi: Kalamum Karuthum (Literary criticism)T. M. Chidambara Ragunathan
1984Oru Kaveriyai Pola (Novel)Lakshmi Thiripurasundari
1985Kamban: Putiya Parvai (Literary criticism)A. S. Gnanasambandan
1986Ilakkiyathukku oru Iyakkam (Literary criticism)Ka. Naa. Subramaniam
1987Mudalil Iravu Varum (Short stories)"Aadhavan" Sundaram[3]
1988Vazhum Valluvam (Literary criticism)V. C. Kulandaiswamy
1989Chintanadi (Autobiographical Essays)L. S. Ramamirtham (la. sa. ra)
1990Veril Pazhutha Pala (Novel)Su. Samuthiram
1991Gopallapurathu Makkal (Novel)Ki. Rajanarayanan
1992Kutralakurinji (Historic Novel)Kovi. Manisekaran
1993Kathukal (Novel)M. V. Venkatram
1994Pudhiya Dharsanangal (Novel)Ponneelan (Kandeswara Bhaktavatsalan)
1995Vanam Vasappadum (Novel)Prapanchan
1996Appavin Snehidar (Short stories)Ashoka Mitran
1997Chaivu Narkali (Novel)Thoppil Mohamed Meeran
1998Visaranai Commission (Novel)Sa. Kandasamy
1999Aalapanai (Poetry)S. Abdul Rahman
2000Vimarsanangal Mathippuraikal Pettikal (Criticism)Thi. Ka. Sivasankaran
2001Sutanthira Daagam (Novel)C. S. Chellappa[3]
2002Oru Giraamattu Nadi (Poems)Sirpi Balasubramaniam
2003Kallikattu Ithikasam (Novel)R. Vairamuthu
2004Vanakkam Valluva (Poetry)Tamilanban
2005Kalmaram (Novel)G. Thilakavathi
2006Akayathukku Aduthaveedu (Poetry)Mu. Metha
2007Ilai Uthir Kaalam (Novel)Neela Padmanabhan
2008Minsarapoo (Short story)Melanmai Ponnusamy[4]
2009Kaioppam (Poetry)Puviarasu[5]
2010Soodiya poo soodarka (Short story collection)Nanjil Nadan[6]

15 comments:

 1. அதி முக்கியமான கேள்வியை கேட்டு உள்ளீர்கள். உண்மை வெளி வரட்டும்

  ReplyDelete
 2. அன்புள்ள திரு இரவிகுமார்,

  முதலாவதாக நாம் தலித் என்ற மராட்டிய பதத்திற்கு சமமான ஒரு சொல்லை
  பயனுக்கு கொண்டுவரவேண்டும். சாதி என்ன என்ற கேள்வி வரும்போது எவ்வித
  தாழ்வு உயர்வு மனப்பான்மையும் கொள்ளாமல் பல்லர்,கள்ளர்,அய்யர் என்று
  கூறுவது சரி என்பது எனது எண்ணம்.

  சாதியை வெல்ல அதன் முகத்தில் நெருப்பென நேராக விழிக்கவேண்டும்.

  இட ஒதுக்கீடுகள் எந்த சாதியையும் முன்னேற்றிவிடப்போவதில்லை.இட
  ஒதுக்கீடுகள் பள்ள்ர் பறையர் குடியிருப்புகளில் கொண்டுவந்த மாற்றத்தை
  விட கல்விபற்றி கவலைப்படமால் உழைக்கும் கைகளைப்பார்த்து கவர்ந்துகொண்ட
  நகரமயம் கடந்த 10 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் அதிகம்.

  டஒதுக்கீடுகள் ஒரு சாதியில் சிலரை ஒதுக்கி மேல்சாதியினருக்கு சமமானவராக
  ஆக்கிவிட்டதாக பீற்றிக்கொள்கிறது.இவர்கல் எல்லாம் சாதிவாரியான சங்கங்கள்
  வைத்துக்கொள்வதும் ,தனிப்பட்ட பேசூ வார்த்தைகளில் சாதியோடு மிகமோசமான
  வசவுகளையும் சேர்த்துபேசிக்கொள்வதை பார்க்கும்போது இவர்கள் என்ன கல்வி
  கற்ரார்கள் என்று நினைக்கத்தோன்றும். இவர்களின் தலைக்குள் அந்த
  கிராமத்தின் கேவலமான சாதிய பண்பாடு தான் பலமடங்கு உக்கிரமாக உள்ளது.

  சாகித்ய அகாடமை விருது தலித்துக்கு தரவில்லை என்று கூறுகிறீர்கள்.எனக்கு
  அதைவிட பெரிய மனக்குறை எனக்கு உண்டு. கிராமத்து குழந்தைகள் பள்ளிபேருந்து
  மூலமாகவோ அல்லது அப்பாவின் இரு சக்கர வண்டிகள் மூலமாக சீருடை மினுக்க
  பள்ளி செல்லும்போது.
  நண்டுக்குஞ்சுகள்போல இரண்டு மூன்றாய் தங்கள் புத்தகப்பையை முகுகில் தொங்க
  விட்டுக்கொண்டு சாயம் வெளுத்து மங்கிய சட்டையுடன் ஒரு வித பீதியுடன் சாலை
  வண்டிகளுக்கு அஞ்சி ஓரமாக ஒதுங்கி ஊர்பள்ளிக்கு
  நடக்கிறார்களே--நிராதரவான இந்த செல்வங்களுக்கு முறையான கல்வி
  கிடைக்கவேண்டும்.அந்த ஒற்ற ஆசிரியர் பள்ளி,அதன் ஆசிரியர் ,பள்ளி
  அனைத்தின் தரம் உயரத்தப்படவேண்டும்.தாய்மொழியில் படிக்கும் இவர்கள்
  வருங்காலத்தில் தமிழையும் ,தமிழினத்தையும் காக்கவேண்டும்.
  தமிழ்தேசியத்தின் வலுவான வேர்களாக ஆகவேண்டும்.

  சாகித்ய அகாடமி விருதை யாருக்காவது கொடுக்கட்டும். அதை பத்து
  வருடங்களுக்கு தொடர்ந்து தலித்துக்கு கொடுத்தாலும் தலித் நிலை
  மாறிவிடாது.
  அன்புடன்
  அரசு

  ReplyDelete
  Replies
  1. samathuvam pesum emadu nalla ullathitku manamarntha nandrikal

   Delete
 3. அன்பின் அரசு ஐயா,
  நல்ல சிந்தனைகளை எழுதியிருக்கிறீர்கள்.

  கல்வி கற்றோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக (20-30%?) இருந்த காலமான
  1960களில் தமிழருக்கு இருந்த தன்மானத்தையும் உணர்வையும் விட
  2000களில் தமிழரிடையே காணப்படும் நேர்மைக்குறைவும் தன்மானக் குறைவும்
  அதிர்ச்சியளிக்கிறது.

  இதற்குக் காரணம் 1960களைவிட சாதிப்பிரிவினைகள் வலுவடைந்திருப்பதாகக் கருதமுடிகிறது.
  அயல்நாடுகளிலும் சாதிகளின் அடிப்படையில் சங்கங்கள் வைத்துத் தமிழன் பிரிந்துதான் கிடக்கிறான்.

  1965ம் 2009ம் தமிழர்களின் உரைகல் போன்ற வருடங்கள்.

  மு.பி 3 ஆம் ஆண்டில்கூட, ஈழப்படுகொலை பற்றி சானல்-4 அலறோ அலறு என்று அலறியும்,
  எடுலைன்சு டுடே அலறியும்கூட பச்சைத் தமிழர்களின் ஒரு தொலைக்காட்சியும் இதனை ஒலிபரப்பவில்லை.
  (கி.பி என்பதுபோல மு.பி = முள்ளிவாய்க்காலுக்குப் பின்)

  அதே காலக்கட்டத்தில் நித்தியானந்தா இரஞ்சிதா படத்தை மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை மூன்றுநாள்கள் காட்டி தங்கள் பகுத்தறிவைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது தமிழ்நாடு. (மலையாள பிட்டுப் படம் ஓட்டும் கொட்டகையெல்லாம் ஈயோட்டிக் கொண்டிருந்திருக்கும்)

  எழுத்துலகம், ஏட்டுலகம், தொலைக்காட்சியுலகம் என்ற மூன்றும் தமிழர்களை வஞ்சித்திருக்கிறது.

  இதில் ஒவ்வொன்றிலும் சாதியின் பேரால் பங்கு தேவையா என்று எண்ணுதல் தகும்.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  ReplyDelete
 4. மதிப்புக்குரிய திருநாவுக்கரசு மற்றும் இளங்கோவன் ஆகியோருக்கு வணக்கம்
  நான் எழுப்பியிருக்கும் பிரச்சனை குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை நேர்மையாகப் பதிவு செய்யுங்கள். கல்வி மற்றும் ஈழப் பிரச்சனை குறித்து நான் ஆற்றிவரும் பணிகளைத் தனியே வேறொரு தொடுப்பில் உங்களிடம் பேசுகிறேன். ஒரு பிரச்சனையைப் பற்றிப் பேசும்போது அதை மடைமாற்றிவிடுவதுபோல இன்னொன்றைப் பபேசுவது ' சாதித் தமிழர்களின் ' தந்திரமாக இருக்கிறது. உங்களது பதில் மொழி அந்த வகையில் அமைந்துவிடக்கூடாது .
  பள்ளிக் கல்வியின் தரம் இந்த அளவுக்கு மோசமானதற்கும் அரசுப் பள்ளிகள் என்பவை 'தாழ்த்தப்பட்ட' மாணவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்கும் தமிழகத்தில் யார் காரணம் ? இன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்துகிறவர்கள் யார் ? இளங்கோவன் சொல்கிற ஊடக உரிமையாளர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் ? அப்படியானவர்கள் குறித்துப் பேச வருகிறபோதெல்லாம் அவர்களின் அரசியல் சார்பை மட்டும் குறிப்பிடுவது ( சாதியைத் தந்திரமாக மறைத்துவிடுவது ?௦ ) எந்தவிதத்தில் நியாயம் ?
  தலித் ஒருவருக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்துவிட்டால் சாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எண்ணுகிற முட்டாளாக என்னை சித்திரிக்க முயல்கிறது உங்கள் பதில். அது உங்கள் நோக்கமாக இருக்காது என்று நம்புகிறேன். அரசு சார்பு நிறுவனங்கள் எந்த அளவுக்கு சாதிச் சார்போடு செயல்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதே எனது நோக்கம். அதைப்பற்றி நீங்கள் உங்கள் கருத்தை எழுதினால் நல்லது.
  ரவிக்குமார்

  ReplyDelete
 5. அன்பின் திரு.இரவிக்குமார் அவர்களுக்கு,
  வணக்கம்.

  //நான் எழுப்பியிருக்கும் பிரச்சனை குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை நேர்மையாகப் பதிவு செய்யுங்கள்.
  //

  [எழுத்துலகம், ஏட்டுலகம், தொலைக்காட்சியுலகம் என்ற மூன்றும் தமிழர்களை வஞ்சித்திருக்கிறது.
  இதில் ஒவ்வொன்றிலும் சாதியின் பேரால் பங்கு தேவையா என்று எண்ணுதல் தகும்.]


  ஐயா, தாங்கள் பேசிய கருத்துக்கு எனது மறுமொழியாக நான் எழுதினவைதான் இவை.(நீல வரிகள்)
  என் அஞ்சலின் கடைசி இரண்டு வரிகள் இவை. அவ்வரிகளுக்கு மேல் எழுதியிருந்தவை
  இவ்வரிகளை எழுதக் காரணமான என் கருத்துக்களே தவிர
  உறுதியாக மடைமாற்றம் செய்வதற்காக இல்லை.
  அப்படிக் கருதுமாறு அமைந்ததற்காக மிகவும் வருந்துகிறேன்.

  எழுத்துலகம் உள்ளிட்ட பல மிடையங்களும் உயர் வகுப்பு என்று சொல்லிக் கொள்வாரிடம் இருந்தது
  என்றும் அதனை உடைத்து குமுகத்திற்கு பெருநன்மைகள் செய்வோம் என்றும்தான் திராவிட இயக்கங்கள்
  ஆர்ப்பரித்தன. தற்போதைய மிடையம் உயர் வகுப்பார் என்று சொல்லப் படுவோர்களிடம் மட்டும் இல்லை.
  உயர்/பிற்படுத்தப் பட்டோர் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரிடமும் பரவிக் கிடக்கிறது. இந்தச் சூழலில் என்ன பயன் விளைந்துள்ளது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

  அவனைப்பார் அவனுக்கு மட்டுமா அது? என்று கிளர்ந்தெழுந்தவர்கள் தானுமவராகவே
  ஆகி நின்றிருக்கிறார்கள். வலியால் கிளர்ந்தெழுந்தவர்கள் அவர்கள் என்று தற்போது
  என்னால் நம்பமுடியவில்லை. ஒரு பங்காளித்துவம் மட்டுமே அதில் காணமுடிகிறது.
  (வலியால் கிளர்ந்தெழுந்தவன் வாய்ப்பு கிடைத்ததும் வலிகொடுத்தவனை விட
  உயர்ந்து நின்று காட்டியிருப்பான் என்பது எனது அப்பாவித்தனமான அல்லது
  முட்டாற்றனமான நம்பிக்கை.)

  எழுத்துலகம் உள்ளிட்ட மிடைய உலகிடம் இருக்க வேண்டிய மிடுக்கும் ஆண்மையும் போற்றத்தக்கதாக
  என்னால் காணமுடியவில்லை. மாறாக அதன் திசை அச்சுறுத்தலாகவே இருக்கிறது.

  புறக்கணிக்கப்படுகிற தலித்துகள் என்ற உரிமைக்குரலில் உள்ள வலி மற்றும் நீங்கள் சுட்டியிருக்கும் அரசு நிறுவனச் சார்புகள் ஆகியவற்றிற்குப் பங்காளித்துவம் மருந்தாக அமைந்துவிடும் என்ற நம்பிக்கை
  எனக்கு இல்லை என்பதாலேயே அதனினும் மாற்று வேண்டும் என்ற தேடலில் மட்டுமே என் கருத்துக்களை
  எழுதியிருக்கிறேன். மற்றபடி சாதித்தமிழர்களின் தந்திரம் என்று கருதவேண்டாம். ஏனென்றால் சாதித்தமிழரின் உண்மையான அழுக்குப் பக்கங்கள் இன்னும் அவிழ்க்கப்படவேயில்லை. சாதித்தமிழர்கள் சாதித்ததெல்லாம்
  தமது அழுக்குகளை மறைத்து யாரோ ஒருவனைக் காட்டி ஏமாற்றியதுதான். அந்த அழுக்கைக் களையும்
  வெள்ளம் உங்களைப் போன்றோரிடம் இருந்து வெளியாகும் என்றால் அதனை ஆடிப்பெருக்கைப் போல் கருதுவேன். அதுவரை பங்காளித்துவம்தான் என்றால் அதில் எனக்குப் பற்றில்லை.

  நன்றி.
  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  ReplyDelete
 6. திரு இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம்
  உங்கள் விளக்கத்துக்கு நன்றி. நான் கோருவது பங்காளித்துவம் அல்ல. சாகித்ய அகாதமி போன்ற நிறுவனங்கள் சாதியக் கண்ணோட்டத்தோடு நடந்துகொள்வதையும் அதை எவரும் கண்டுகொள்ளாதிருப்பதையும் கவனப்படுத்தவே விரும்பினேன். நிறுவனங்கள் அதுவும் அரசு சார்பு நிறுவனங்கள் சனநாயகப் படுத்தப்படவேண்டும். ஊடகங்கள் மட்டுமல்ல பல்கலைக் கழகங்களும் இப்படியான சாதியச் சேற்றில்தான் புதையுண்டு கிடக்கின்றன. அவற்றின் செனட் . சிண்டிகேட் போன்ற அவைகளில் ' தாழ்த்தப்பட்டோருக்கு ' உரிய பிரதிநிதித்துவம் இல்லை. துணைவேந்தர் நியமனங்களிலும் அதேவிதமான பாகுபாடுதான் நிலவுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் உரிய இடங்களைப் பெற முடியாமல் போவதற்கும் , மிகவும் சிரமப்பட்டு அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர்கிற மாணவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிப்பதும், சிலர் தற்கொலை செய்துகொள்வதும இத்தகைய சனநாயகமற்ற சூழலின் விளைவுகள் அல்லவா ? இவற்றைக் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டியது சனநாயகத்தின் பால் பற்றுகொண்டோரின் கடமை அல்லவா ? சமத்துவம் இல்லாமல் தமிழர் ஒற்றுமையைக் கட்டியமைக்க முடியுமா ?
  சமத்துவத்தையும் சம வாய்ப்புகளையும் கோருவது வெறுமனே பங்காளித்துவம் ஆகாது. இன்று திராவிட இயக்கங்கள் கண்டிருக்கும் கருத்தியல் வீழ்ச்சிக்கான காரணத்தை அம்பேத்கர் அன்றே சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜஸ்டிஸ் கட்சியின் வீழ்ச்சி பற்றி பேசியபோது ' அவர்கள் பிராமணர்களின் இடத்தைத் தாம் பிடிக்கவேண்டும் என்று கருதினார்களே தவிர தமக்கான தனித்துவத்தை உருவாக்கவில்லை ' என்ற பொருள்பட அவர் சொல்லியிருக்கிறார். இது தலித் இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடியதே. திராவிடக் கட்சிகளை முன்மாதிரியாகக் கொள்வது தலித் இயக்கங்களுக்குப் பெரும் கேடாகவே முடியும்.
  உங்களைக் குறைகூறுவது என் நோக்கமல்ல. தற்போதிருக்கும் சமூகக் கேடுகளைக் களைய அக்கறை உள்ள அனைவரும் சேர்ந்து குரல் எழுப்பவேண்டும். சாகித்ய அகாதமி பிரச்சனையிலும் அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.
  அன்புடன்
  ரவிக்குமார்

  ReplyDelete
 7. நேரு பிரானால்..
  தேசத்தின் மிகச் சிறந்த இராஜ தந்திரி (மதியூகி)
  அரசியல் அறிஞர் என்றெல்லாம் பெரிதும் போற்றப்பட்ட..
  பறையர் குலத்தில் பிறந்த கேயார் நாராயணன் அவர்கள்..
  (பெருந்தன உழவூர்க்காரர் (இன்றைய கோட்டய மாவட்டம் ))
  இந்தியக் குடியரசின் தலைவராக உயர்ந்திட்ட போதிலும்..
  தலித்துகளுக்கு.. பொருளாதார சுதந்திரம்.. பெரிதாக..
  ஒன்றும் கிடைத்து விடவில்லை..!?

  மற்றபடி..
  மராத்திய/மஹார் மொழியில்..
  தலித் என்றால்.. உடைந்த (broken)
  சிதறிய (நெல்லியாய்) என்றொரு பொருளும் உண்டு..?

  ஆனால் உள்ளபடியே
  பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருப்பதற்கு
  முற்றிலும் மாறாக.. மஹாரின மக்கள் (Mahar)
  மிகவும் கட்டுக் கோப்பானவர்கள் மட்டுமல்ல..
  மிகுந்த போர்க்குணம் மிக்கவர்களும் கூட..?

  ஆகவேதானோ என்னவோ..
  அன்றைய தினம்.. அண்ணல் அம்பேத்கர் அவர்கள்
  தலித் என்கிற சொல்லாடலை.. பயன் படுத்தினார் இல்லை.

  ஆனால்.. இன்றைக்கு
  பறையர்/மாலா/மகார் என்றழைக்கப் படுகிற
  ஆதி திராவிட மக்கள்.. பள்ளத்தில் பயிர் செய்யும்
  பள்ளர் என்று அழைக்கப்படுகிறமள்ளர் குல மக்கள்
  (இன்றைய இலங்கையில்.. அவர்கள் வேளாளர்..?)
  ஆகியோர்.. இன்றைக்கு இரு பெரும் மக்கள் திரள்
  அமைப்புகளாக திரண்டு நிற்கும் நிலையில்...

  இன்றைக்கும்.. ஆதிக்க சக்திகளின் பிடியினின்று
  தங்களை விடுவித்துக் கொள்ளும் வழிவகையறியாது
  திகைத்து நிற்கும்.. சக்களியர் என்றழைக்கப் படும்..
  'ஆதித்தமிழ்' அருந்ததிய மாதாரி இன மக்களும்..
  இந்து சீக்கிய மற்றும் இசுலாமிய கிறிஸ்தவமதங்களால்
  கூறு பட்டுக் கிடக்கும்... மேற்படி மக்கள்அனைவரும்
  ஒன்றிணைய.. இன்றைய கால கட்டத்தில்.. தலித் என்கிற
  குழுக் குறி பெரிதும் தேவைப் படுகிறது.. அவ்வளவுதான்.

  கயாஸ்தாக்கள் பேசும் மராத்திய மொழி
  மேற்படியாளர்களால்.. இன்றைய தினம்
  இந்தோ-ஆரியன் மொழி என்று கருதப்படுவது
  ஒரு புறம் இருக்க.. மகார் இனத்தைச் சார்ந்த
  அண்ணல் அம்பேத்கர் அவர்களது தாய்மொழியோ
  மகாரி (வராதி) நாக்பூரி என்பதாகும்..?

  நவீன இந்தை-ஈரோப்பிய மொழி கூட்டத்திற்கும்
  பழந் தமிழ் திராவிட குழுகக் கூட்டத்தினுக்கும் இடையில்
  காணக்கிடக்கும் அடிப்படை வேறுபாடுகளில் குறிப்பிடத் தகுந்தது..
  தாய்த் தமிழ் இனக்குழுக்களால் மட்டும்.. மிகவும் அணுக்கமாக உணரப்படும்/அறியப்பட்டு வரும்.. நாம் / நாங்கள் எனும் குழு குறியும் ஒன்றாகும்... ? (the inclusive & exclusive “we” feature Clusivity feature.. )

  அது ஒன்றே..
  வராதி(வர்தா) நாக்பூரி.. (Varhadi-Nagpuri )
  மற்றும் கொங்கிணி போன்றவை.. இந்தை ஈரோப்பிய
  கூட்டத்தினை சார்ந்த மொழிகள் அல்ல.. மாறாக தென்னிந்திய
  மொழிகளுள் ஒன்று என்பதற்கான அசைக்க முடியாத சான்றாகும்...?

  மிகவும் நன்றி...!

  அன்புடன்.../பூபதி என்கிற வர்தாபாய் (wannabe)

  ________________________

  பிகு: சாகித்திய அகாதமி என்பது
  கள்ளக் 'கயாஸ்தா' பரிவார் (Forwad Block) மற்றும்
  தமிழ் 'பேசும்' பிராமணஎழுத்தாளர்களுக்கு (உத்திரகலை..?)
  அதிகம் வழங்கப் படுவதில்.. வியப்படைய ஏதுமில்லை...

  மேற்படியார்களின் அடியொற்றி..
  என்றைக்கு.. எமது தமிழ் எழுத்தாள பெருமக்களும்
  அதிமேதாவித்தனமான தமது புதினங்களை...
  'பச்சை (தமிழ்) நாய்' 'எருமைத் தமிழன்'..
  'பரத்தி வீரன்' மற்றும் 'ஒப்பற்ற ஒழுக்க சீலன்'
  (Nauseating narcissist with a false modesty)
  போன்ற இலக்கியத் தரமிக்க இனியத் தலைப்புகளில்..
  மேற்படியானை திருப்திப் படுத்தும் இதமான
  இலக்கியத் தமிழில்.. (Postmodern Tamil i.e.,)
  தனது சக தமிழனை காட்டிக் கொடுத்து எழுதுகிறானோ..
  அன்றைக்குத்தான் தோழர்களே.. மேற்படி விருதுகள்
  அவனது வீடு தேடி வரும்.. எனவே வருந்தற்க.. :-)
  ___________________________________

  ReplyDelete
 8. திரு இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம்
  உங்கள் விளக்கத்துக்கு நன்றி. நான் கோருவது பங்காளித்துவம் அல்ல. சாகித்ய அகாதமி போன்ற நிறுவனங்கள் சாதியக் கண்ணோட்டத்தோடு நடந்துகொள்வதையும் அதை எவரும் கண்டுகொள்ளாதிருப்பதையும் கவனப்படுத்தவே விரும்பினேன். நிறுவனங்கள் அதுவும் அரசு சார்பு நிறுவனங்கள் சனநாயகப் படுத்தப்படவேண்டும். ஊடகங்கள் மட்டுமல்ல பல்கலைக் கழகங்களும் இப்படியான சாதியச் சேற்றில்தான் புதையுண்டு கிடக்கின்றன. அவற்றின் செனட் . சிண்டிகேட் போன்ற அவைகளில் ' தாழ்த்தப்பட்டோருக்கு ' உரிய பிரதிநிதித்துவம் இல்லை. துணைவேந்தர் நியமனங்களிலும் அதேவிதமான பாகுபாடுதான் நிலவுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் உரிய இடங்களைப் பெற முடியாமல் போவதற்கும் , மிகவும் சிரமப்பட்டு அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர்கிற மாணவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிப்பதும், சிலர் தற்கொலை செய்துகொள்வதும இத்தகைய சனநாயகமற்ற சூழலின் விளைவுகள் அல்லவா ? இவற்றைக் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டியது சனநாயகத்தின் பால் பற்றுகொண்டோரின் கடமை அல்லவா ? சமத்துவம் இல்லாமல் தமிழர் ஒற்றுமையைக் கட்டியமைக்க முடியுமா ?
  சமத்துவத்தையும் சம வாய்ப்புகளையும் கோருவது வெறுமனே பங்காளித்துவம் ஆகாது. இன்று திராவிட இயக்கங்கள் கண்டிருக்கும் கருத்தியல் வீழ்ச்சிக்கான காரணத்தை அம்பேத்கர் அன்றே சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜஸ்டிஸ் கட்சியின் வீழ்ச்சி பற்றி பேசியபோது ' அவர்கள் பிராமணர்களின் இடத்தைத் தாம் பிடிக்கவேண்டும் என்று கருதினார்களே தவிர தமக்கான தனித்துவத்தை உருவாக்கவில்லை ' என்ற பொருள்பட அவர் சொல்லியிருக்கிறார். இது தலித் இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடியதே. திராவிடக் கட்சிகளை முன்மாதிரியாகக் கொள்வது தலித் இயக்கங்களுக்குப் பெரும் கேடாகவே முடியும்.
  உங்களைக் குறைகூறுவது என் நோக்கமல்ல. தற்போதிருக்கும் சமூகக் கேடுகளைக் களைய அக்கறை உள்ள அனைவரும் சேர்ந்து குரல் எழுப்பவேண்டும். சாகித்ய அகாதமி பிரச்சனையிலும் அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 9. திரு ரவிக்குமார்
  தங்கள் பதிவில் குறைந்தது தகுதியான எழுத்தாளர்கள் பத்துப் பேருக்கு மேல் உண்டு எனக்குறிப்பிட்டு உள்ளீர்கள். தங்கள் பரிந்துரை செய்யும் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் படைப்புக்கள் பற்றியும் அறிந்துகொள்ள ஒரு பட்டியல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  ReplyDelete
 10. வினைதீர்த்தான் அவர்களுக்கு வணக்கம்
  இணையத்துக்கு அப்பால் வாசிக்கும் பழக்கம் இருக்கிற எவரும் இப்படிக் கேட்க மாட்டார்கள் . எனினும் சில பெயர்களைக் கூறுகிறேன். பூமணி, சோ .தர்மன், சிவகாமி , பாமா , இமையம். அழகியபெரியவன், என்.டி.ராஜ்குமார் , ராஜ் கௌதமன் , விழி. பா.இதயவேந்தன் , மற்றும் கே .ஏ .குணசேகரன் .
  அன்புடன்
  ரவிக்குமார்

  ReplyDelete
 11. ஒருவரை உயர்த்தினால அவர் தன்னோடு சேர்ந்தவரை உயர்த்தணும். கே ஆர் நாராயணன் சொந்த ஊருக்கு போய் தன் இனமக்களுக்காக பாடுபடுவதை விடுத்து தில்லியில் போய் குந்திக்கொண்டார்

  மற்ற சாதிக்காரனாக இருந்தால் தன் சாதிக்காரகளை டில்லியில் உட்காரவைத்து இருப்பார்கள்

  நாடார்கள் முன்னேற்றத்துக்க்கு காமராசர் காரணம் என்பார்கள். அது போல் இருக்கணும்.


  வேந்தன் அரசு
  வள்ளுவம் என் சமயம்

  ReplyDelete
 12. அன்பின் திரு.இரவிக்குமார் அவர்களுக்கு,
  வணக்கம்.

  புரிதலுக்கும் அம்பேத்கரின் அந்நாளையச் சிந்தனையைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

  // திராவிடக் கட்சிகளை முன்மாதிரியாகக் கொள்வது தலித் இயக்கங்களுக்குப் பெரும் கேடாகவே முடியும்.
  //

  100/100 இதேதான் எனது கருத்தும்.

  சமவாய்ப்பு வேண்டும் என்று கோருவதில் பிழையில்லை.
  சமவாய்ப்பு வேண்டும் என்று யார் சமவாய்ப்பை மறுக்கிறார்களோ அவர்களிடமே
  கேட்கவேண்டியிருப்பது மிகக் கவலையான விதயம். சனநாயகம் என்பது இந்தியாவில்
  யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்குத் துணைபோவதால்
  அது பரந்த சனநாயகமாகத் தெரிகிறது என்றே கருதுகிறேன். சனநாயகம் உண்மையானது என்றால்
  இந்தியாவை ஒரே கட்சி/குடும்பம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டிருக்க முடியாது. தமிழ்நாட்டில்
  40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பம் தி.மு.கவை கைப்பற்றி வைத்திருந்திருக்க முடியாது.
  என்னைப் பொறுத்தவரையில் சனநாயகத்தின் மேல் கவலைப்படும் நிலை தாண்டி
  பரிதாபப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.

  இந்த சனநாயகக் கட்டுகள் கோரிக்கைகளுக்குச் செவி மடுக்காது. தலித்து மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்
  என்றால் சாகித்தியத்திற்கும் அரசிற்கும் குரல் கொடுப்பதை விட, முற்றிலுமாக சாகித்தியத்தைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவிக்க வேண்டும்.

  தலித்து வகுப்பினர் தாமே ஒரு கழகம்/அகாதமியைத் துவக்கவேண்டும். சாகித்தியத்தின் விருதினை விட உயர்ந்த விருதாக அதனை நடைமுறைப் படுத்தி தலித்துகளுக்கு மட்டுமன்றி பிறருக்கும் விருதும் வழங்கும் நிலையை
  ஏற்படுத்த வேண்டும். இது முடியாததல்ல. இதுவும் சனநாயகம்தான். புறக்கணிப்பவர்களுக்கும் விருது கொடுக்கும் நிலையை ஏற்படுத்தும்போது புறக்கணிப்பவர்களின் திமிர் வெகுவாகக் குறையும் என்று நான் கருதுவதுண்டு. ( முதல்விருதை சாகித்திய அகாதமிக்கே கொடுக்க வேண்டும் :) )

  அரசு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில் இருக்கும் பாகுபாடுகளைக் கண்டு மட்டுமே
  தலித்து இயக்கங்கள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் கவலைப்படுவதை நிறைய காணமுடிகிறது.
  தனியார் துறைக்குள் இருக்கும் சாதியச் சரவல்கள் எண்ணிலடங்கா. அரசாங்கத்தைக் கவனிக்கிற இயக்கங்கள் தனியார்களையும் ஆழ்ந்து பார்க்கும்போது நிறைய அதிர்ச்சிகளைக் காணமுடியும்.

  இதையும் தாண்டி எப்படி ஒரு ஏற்றத்தாழ்வு இல்லாத குமுகம் அமையும் என்று எண்ணினால் வெறுமையே கிட்டுகிறது.
  - Hide quoted text -

  நன்றி.
  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  ReplyDelete
 13. அன்பு வேந்தன் அரசு,
  தாங்கள் கூறியுள்ள கருத்து மிகவும் சரியானது என் எண்ணுகின்றேன்.
  படித்த மேதாவிகள் கும்பெனி ஆட்சியின் கோட்டைகளாக வளரும் நகரில்
  கோவணத்துணிபோல ஒரு இடம் பிடித்து அதில் நெருப்பு பெட்டிபோல ஒரு இருப்பை
  அமைத்து வாழ்வியலை கிராமங்களில் இருந்து தூரமாக அமைத்துக் கொண்டு பெரிய
  சாதனையாக பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களது அண்ணனோ,அப்பாவோ
  இன்று கூட பொழுது விடிந்தவுடன் தலித்துக்கு ஒதுக்கப்பட்ட குவளையைத்தான்
  கையிலெடுக்கிறார்கள்.

  இன்று ஒரு நகரத்தில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, அந்த நகரின் காவல்
  துறையின் முன் அனுமதி பெற்று தீண்டாமைக்கொடுமைபற்றியும் ,தலித் மக்களின்
  மீது நாளும் காட்டப்படும் ஆதிக்கக்கொடுமை பற்றியும் கவிதை
  வாசிக்கலாம்.கட்டுரைகள்,நூல்கள் வெளியிடலாம். ஆவேசமாகப் பேசி கேட்போரை
  பிணிக்கலாம். ஆனால் கிராமத்தில் இருக்கும் சாதிய நடைமுறையை எதிர்த்து
  அந்த கிராமத்தில் ஒரு நடவடிக்கை எடுப்பது எளிதானதா?

  தமிழகத்தின் சுமார் 17000 கிராமங்களில் நடப்பது ஒரு ஆட்சி. அதை சனநாயகம்
  என்று விளையாட்டிற்குக் கூட கூறமுடியாது. இந்த ஊர்களில் நிலவும்
  அடிமைவாழ்வை "இனிய அமைதியான இயர்கைசூழ் வாழ்வாக " சித்தரிக்கும்
  கலைஞர்கள்தான் பாராட்டப்படுவர். ஆளும் அரசியல் ,அதிகார அமைப்புகள்
  எங்கிருந்து வருகின்றன.

  இந்த கிராமங்களை அசைக்காமல் தலித்துகளை விடுதலை செய்ய
  முடியாது.படித்தவர்கல் இந்த கிராமங்களில் தங்கள் அறிவை தீட்டிக்கொள்ள்
  வேண்டும். நகரத்து கும்பெனியாரிடம் முறையிட்டு சலுகைகள் பெறுவதும்,
  நியாயம் கேட்பதும் நடக்கின்றன.ஒரு பகுதி தலித்துகளுக்கு சில மேன்மைகள்
  கிடைக்கலாம்.ஆனால் பெருவாரியான தலித்துகளின் நிலை எப்படி மாறும்?

  படித்தவர்கள் அமைக்கும் சாதி சங்கங்கள் எதுவாயினும் அது தனது
  அமைப்பினரின் நலன்களை உறுதிப்படுத்த எல்லா சட்டபூர்வ மற்றும்
  சட்டத்திற்கு புறம்பான எல்லா செயல்களிலும் ஈடுபடிகின்றனவே.இவைகளா
  மக்களுக்கு சனநாயகத்தை உறுதிப்படுத்தும்.

  அக்கிரகாரம்,குடியானத்தெருக்கள் ,தலித் குடியிருப்புகள் ஆகியவைகளுக்கு
  இடையே நடைமுறையில் உள்ள முள் இல்லாத ஆனால் எஃகைவிட வலிய வேலிகள் உள்ளன.
  இந்த வேலிகளைத் தாண்டாமல் ஊர் விடுதலை பெறாது.விடுதலையற்ற ஊர்களின்மீது
  சனநாயகம் நிற்கமுடியாது.

  ஊடகங்கள் உருவாக்கும் மாயைகள் அடைமைப்படுத்தும் சக்திகொண்டன.
  ஆரியம்...திராவிடம்... தலித்தியம்...

  தமிழ்த்தேசியம் என்று ஒன்றுபடும் வழிதான் தலித் விடுதலைக்கான ஒரே
  வழி.அதர்கு சாதிவேலிகள் அறுபடவேண்டும். புதுப்புது வேலிகளாக அவைகளை
  மாற்றியமைக்க முடியாது.
  அன்புடன்
  அரசு

  ReplyDelete
 14. இதைத் தெளிவாக உணர்ந்திருந்ததால்தான் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது அதன் அடிப்படை அலகாக கிராமம் என்பதை வைக்கவேண்டும் என்ற காந்தியின் வாதத்தை முறியடித்து தனிமனிதனை அடிப்படை அலகாக மாற்றினார் அம்பேத்கர். இன்றும் பிற்போக்குத்தனத்தின் விளைநிலமாக இருக்கின்ற கிராம அமைப்பை வலுப்படுத்துவதுதான் ராசீவ் காந்தி கொண்டுவந்த பஞ்சாயத் ராஜ் சட்டம். '' we must not forget that these idyllic village-communities, inoffensive though they may appear, had always been the solid foundation of Oriental despotism, that they restrained the human mind within the smallest possible compass, making it the unresisting tool of superstition, enslaving it beneath traditional rules, depriving it of all grandeur and historical energies.'' என்று இந்திய கிராமங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டதை மறந்துவிட்டு நம் ஊர் கம்யூனிஸ்டுகள் பஞ்சாயத்து அமைப்பை இன்னும் வலுவானதாக்க வேண்டும் என்கிறார்கள்.
  -ரவிக்குமார்

  ReplyDelete