Friday, September 19, 2014

நிகரி - சமத்துவ ஆசிரியர் விருது




மணற்கேணி ஆய்விதழ் வழங்கும்

நிகரி - சமத்துவ ஆசிரியர் விருது

கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவித்து வருகிறோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என  அழைக்கப்படும்.

இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி விழுப்புரம் போதி அய்.ஏ.எஸ் அகாடமியில் மாலை 6 மணிக்கு இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான விருது :

கடலூர் கிருஷ்ணசாமி மேனிலைப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றும் திரு இரா.நடராசன், 

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் திரு கி.நாச்சிமுத்து  

ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பேராசிரியர் பா.கல்யாணி, எழுத்தாளர் இமையம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். 

மூத்த பத்திரிகையாளர் திரு ஞாநிஅவர்கள் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்வுக்கான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளேன். கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்

ரவிக்குமார்

ஆசிரியர், மணற்கேணி


Attachment

No comments:

Post a Comment