Thursday, September 10, 2015

லட்சுமி என்னும் பயணி: வாசிக்கவேண்டிய ஒரு நூல் - ரவிக்குமார்
லட்சுமி அம்மா எழுதிய ' லட்சுமி என்னும் பயணி' என்ற தன்வரலாற்று நூல் மைத்ரி புக்ஸ் என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. 

தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் துணைவியாரான லட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு கம்பெனியில் வேலைக்குப் போனது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் சிபிஐ எம் கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து அதுவும் நிலைக்காமல் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி துவக்கியது - இப்படிப் பல்வேறு செய்திகளை இதில் எழுதியுள்ளார். 

1975 - 2000 காலப் பகுதியில் தஞ்சையிலும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் நிலவிய சூழல் ஆங்காங்கே பதிவாகியிருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பலரை எனக்குத் தெரியும் சிலரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

தன்னிடம் அன்புகாட்டாத பெற்றோர், சொந்த வீட்டில் தான் பட்ட கஷ்டங்கள், வறுமை- என தனது இளம் பருவக் காலத்தை அவர் விவரித்திருப்பது நெகிழச் செய்கிறது. இளம் பெண்ணாக, தாயாக, குடும்பத் தலைவியாக அவர் எதிர்கொண்ட சவால்கள் பல நாவல்களை எழுதும் அளவுக்கு இருக்கின்றன. 

அவ்வப்போது காலத்தை எதிர்த்துப் போராடியவராகவும் பெரும்பாலும் காலத்தால் இழுத்துச் செல்லப்படுபவராகவும் லட்சுமி அம்மாள் தெரிகிறார். சமூகத்தின் மைய நீரோட்டத்தில் கலக்காமல் செயல்படும்  இடதுசாரி செயல்பாட்டாளர்களிடம்கூட பொதுப்புத்தி எவ்வாறு இயங்குகிறது என்பதை இந்த நூல் தொட்டுக்காட்டுகிறது. 

இந்த நூலில் பேசப்படும் தலைமறைவு வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகளால் ஏவப்படும் வன்முறை முதலான விஷயங்கள் வேறு தன்வரலாற்று நூல்களில் காணக்கிடைக்காதவை. 

" பெ.ம விகடன் இதழ் வாங்கி வருவார் அதில் திருமாவேலன், கவின்மலர் கட்டுரைகளைப் படிப்பேன். தமிழர் இனம் வென்றுவிடும் என்று தோன்றும்" என்ற லட்சுமி அம்மாவின் நம்பிக்கையைப் படித்தபோது வியப்பாகவும் பயமாகவும் இருந்தது. 

லட்சுமி அம்மாவின் அனுபவங்களை எங்கெங்கு விரிவாகப் பதிவுசெய்ய வைக்கலாம் என்பதைக் கண்டறிந்து அந்த இடங்களில் இன்னும் விரிவாகப் பதிவுசெய்யச் சொல்லியிருந்தால் இந்த நூல் இன்னும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கும். அவரைக் கள்ளம் கபடமில்லாத வெள்ளந்தியான மனுஷியாகக் காட்டுவதைத்தான் பதிப்பாளர்கள் விரும்பினார்களோ என்னவோ. அதனால் சில இடங்களைத்தவிர பெரும்பாலான இடங்களில் செய்திகளின் கோர்வையாக இந்த நூல் அமைந்திருக்கிறது. 

" உழைப்பு , பராமரிப்பு, உறவுப் பிணைப்பு - இவற்றை ஆதாரமாகக்கொண்டு விரியும் வாழ்க்கை அனுபவங்களைப் பேசும் அபூர்வமான பதிவாகும்" என இந்த நூலின் முன்னுரையில் வ.கீதா குறிப்பிட்டிருக்கிறார். அதை வழிமொழிகிறோமோ இல்லையோ இது வாசிக்கப்படவேண்டிய ஒரு நூல்தான் என்று உறுதியாகக் கூறலாம்.

கூனல் பிறை நூலுக்கு விருது

Saturday, April 11, 2015

திருச்சியில் மணற்கேணி விற்பனையகம்

திருச்சியில் மணற்கேணி விற்பனையகம் 
===================
மணற்கேணி நூல் விற்பனையகம் இன்று திருச்சி கே கே நகர் இந்தியன் வங்கிக் காலனியில் திறந்துவைக்கப்பட்டது. அ.க.தமிழாதன் முன்னிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் டாக்டர் மணிமேகலை அவர்கள் விற்பனையகத்தைத் திறந்துவைத்தார். தேன்மொழி, பூங்கொடி, பூங்கோதை ஆகியோர் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தனர். மாணவர் அம்பேத்கர் நூல்களைப் பெற்றுக்கொள்ள பெரம்பலூர் கிட்டு விற்பனையைத் துவக்கிவைத்தார். 

பஞ்சு, கோபாலகிருஷ்ணன், பிரபாகரன், அரசு, கனியமுதன், நிலவன், இளம்பரிதி முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

மணற்கேணி பதிப்பக நூல்களை இங்கே வாங்கலாம். தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்களின் நூல்களும் விரும்புவோருக்கு வாங்கித் தரப்படும். 

முகவரி : 

மணற்கேணி விற்பனையகம்
10, காந்தி காம்ப்ளெக்ஸ்
ஷரோன் பேக்கரி எதிரில்
5 ஆவது குறுக்குத் தெரு
இந்தியன் வங்கி காலனி 
கே கே நகர்
திருச்சி

தொடர்புக்கு : 
கோபாலகிருஷ்ணன் 97-91-557360

Sunday, April 5, 2015

மணற்கேணி தொகுப்பு


பனுவல் புத்தகக் கடையில் கிடைக்கும்

மணற்கேணி ஆய்விதழ் இதுவரை 28 இதழ்கள் வெளிவந்துள்ளன. அதன் ஒட்டுமொத்தத் தொகுப்பு பனுவல் புத்தகக் கடையில் கிடைக்கும். ஆய்வு மாணவர்களுக்கு சிறப்புக் கழிவு உண்டு. 

தொகுப்பு வேண்டுவோர் தொடர்புகொள்க: 

பனுவல் 
112, முதல் தளம் திருவள்ளுவர் சாலை
திருவான்மியூர் சென்னை 600 041
ஃபோன்: +91 8939-967179


தமிழ்நாட்டை குக்கிராமம் ஆக்கியது யார்? - ரவிக்குமார்


மலையாளக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை வாசிக்கும் விதமே தனி அழகுதான். அதைக் கேட்கும்போது நாமும் மலையாள மொழியின் காதலர்களாகிவிடுவோம். 

ஆசான் மெமோரியல் அசோசியேஷனின் பொன்விழாவின் அங்கமாக தென் இந்திய கவிஞர்கள் பங்கேற்கும் 'கவிசம்மேளனம்' ஒன்றை சென்னையில் இன்று (05.04.2015 ஞாயிறு) ஒருங்கிணைத்திருந்தது. ஐந்து மொழிகளைச் சேர்ந்த கவிஞர்கள் அழைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதில் கவிஞர் கே.சச்சிதானந்தன் தனது கவிதைகளை வழங்கினார். 

முதலில் பிணக்கு என்ற தலைப்பிலான கவிதையை மலையாளத்தில் வாசித்தார்.  அண்மையில் காலமான அய்யப்பன் என்ற கவிஞரின் நினைவாகத் தான் எழுதிய  நீண்ட கவிதையையும், அரபு வசந்தத்தின் தாக்கத்தில் எழுதிய நிற்கும் மனிதன், முத்தம் ஆகிய கவிதைகளையும் அடுத்து வாசித்தார். ( இவற்றை நான் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன்) கடைசியாக மந்திரவாதி என்ற கவிதையை வாசித்தார். பிணக்கு தவிர மற்ற கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசித்தது மலையாளம் தெரியாதவர்களுக்கு உதவியாக இருந்தது. 

சச்சிதானந்தனின் கவிதைகள் கேரள மண்ணில் வேரூன்றி உலகமெங்கும் கிளை பரப்பி நிற்கின்றன. அரபு வசந்தத்தின் போராட்ட வடிவங்களைக் கேரள நகரங்களிலும் பார்க்க முடிகிறது என்பதால் சச்சிதானந்தனின் கவிதைகள் வெறும் கற்பனை சார்ந்தவையாக இல்லை. 

கேரளத்தோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு ஒரு குக்கிராமம் போல் தெரிகிறது. உலக அளவில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வும் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாமர அறிவை( common sense) வியப்பதே அறிவுச் செயல்பாடு எனக் கருதுவோர்தான் இங்கே அறிவு ஜீவிகள். அதனால்தான் புராண மறு உற்பத்தி இங்கே இலக்கிய அந்தஸ்தைப் பெற முடிகிறது. இந்த கருத்தியல் சூழலை உருவாக்கியதில் தமிழ்த் தேசியத்துக்கு முக்கிய பங்கிருக்கிறது. வலதுசாரி மனோபாவத்தை அதுதான் இங்கே உறுதிப்படுத்தியது. தமிழ்த் தேசியம் செப்பனிட்டு வைத்த பாதையில்தான் இந்துத்துவம் பவனி வருகிறது. 

தமிழ்நாட்டில் இந்துத்துவத்தை எதிர்ப்பதோடு இடதுசாரிகளின் பணி நின்றுவிடக்கூடாது. தமிழ்த் தேசியத்தின் வலதுசாரி சாய்வை விமர்சிப்பதிலும் அக்கறைகாட்டவேண்டும். சச்சிதானந்தனின் கவிதைகளைக் கேட்டபோது இந்த எண்ணம் மேலும் வலுவடைந்தது. 

Saturday, April 4, 2015

கவிஞர் கே. சச்சிதானந்தனை சந்தித்தேன் - 1 - ரவிக்குமார்


ஆசான் மெமோரியல் அசோசியேஷன் தனது பொன்விழாவின் பகுதியாக தென் இந்திய கவிஞர்கள் பங்கேற்க்கும் கவிசம்மேளனம் ஒன்றை சென்னையில் இன்று (05.04.2015 ஞாயிறு) நடத்துகிறது. அதில் பங்கேற்க வந்திருக்கும் கவிஞர் கே.சச்சிதானந்தன் அவர்களை இன்று காலையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். 

எந்தப் பொருள் குறித்தும் தடங்கலின்றித் தெளிவாகத் தனது கருத்துகளைத் தெரிவிப்பது சச்சிதானந்தனின் சிறப்பு. தற்போது நிலவும் வலதுசாரி சூழல் குறித்து எங்கள் உரையாடல் அமைந்திருந்தது. தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் 'சரிநிகர்' அமைப்பு குறித்து அவரிடம் சொன்னேன். இந்திய அளவில் Indian Writers Forum என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதைப் பற்றி அவர் கூறினார் . அதில் தமிழ்நாட்டிலிருந்து பிரபலமான எழுத்தாளர் ஒருவரை இணைக்க விரும்பி அசோகமித்திரனிடம் பேசியதாகவும் அவர் தன்னை அதில் சேர்க்கவேண்டாம் எனக் கூறிவிட்டதாகவும் சொன்னார். " பொதுவாக எல்லா மொழிகளிலும் எழுத்தாளர்கள் வலதுசாரி அரசியலை எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஏன் இப்படி இருக்கிறார்கள்? " என சச்சிதானந்தன் வியப்போடு கேட்டார். இளைய தலைமுறை எழுத்தாளர்களிடம் இந்தப் பண்பு அதிகரித்திருப்பதையும் பிரபல எழுத்தாளர்கள் சிலர் எப்படி வெளிப்படையாகவே பாஜகவை ஆதரித்துப் பேசுகிறார்கள் என்பதையும் நான் கவலையோடு அவரிடம் பகிர்ந்துகொண்டேன். 

பெருமாள் முருகன் பிரச்சனையின்போதும் அசோகமித்திரன் அப்படியான தொனியில்தான் பேசியிருந்தார்.கூச்சமே இல்லாமல் வலது சார்புடன் பேசும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை இங்கே அதிகரித்துவருவது தமிழ்ச்சூழலின் அபத்தத்தை சுட்டுகிறது. அரசியல் தளத்தில் சூழும் ஆபத்தைவிடவும் மிகுந்த சேதத்தை உண்டாக்கக்கூடியது கலாச்சார தளத்தில் செல்வாக்குபெறும் வலதுசாரிப் போக்கு. இதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா? 

Sunday, March 29, 2015

ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களின் முக்கியமான ஆலோசனைஇன்று (29.03.2015) சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கருத்து சுதந்திரத்துக்கான கூட்டத்தில் 
தி இந்து நாளேட்டின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் முக்கியமானதொரு ஆலோசனையை முன்வைத்தார்: 

" பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளில் தண்டனை கொடுக்கப்படுவதில்லை. அதற்குமுன்பே வாபஸ் வாங்கிவிடுவார்கள். ஆனால் இந்த process என்பதே ஒரு தண்டனையாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் எவ்வளவு தொகையை வழக்குகளுக்கு செலவு செய்கிறார்கள் என்பது வேதனையான செய்தி. 

தற்போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அவர்கள் ஓவியர் எம்.எஃப்.ஹுஸைன் மீது இந்துத்துவவாதிகள் வழக்கு தொடுத்தபோது அருமையான தீர்ப்பை வழங்கியிருக்கிறார். நீதித்துறையின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் சரியான கருத்துகளை வெளிப்படுத்தினாலும் நீதித்துறையின் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வழக்குகளை எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் பதிவுசெய்துவிடுகிறார்கள். அவர்கள் பதிவுசெய்ய மறுத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். அதற்காக உயர்நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்து ஒரு direction வாங்கவேண்டும்". 

இது முக்கியமான ஆலோசனை. தற்போதைய தலைமை நீதிபதி இருக்கும்போதே அந்த வழக்கைத் தொடுத்தால் நிச்சயம் நல்ல பலன் இருக்கும் . 

Friday, March 27, 2015

தேன்மொழிக்கு விருது!

Women achievers felicitated


Special Correspondent

At World Working Women’s Day

PROUD MOMENT:Thenmozhi and Sister Stella who received awards for writings in Tamil and social work.— PHOTO: A. MURALITHARAN
PROUD MOMENT:Thenmozhi and Sister Stella who received awards for writings in Tamil and social work.— PHOTO: A. MURALITHARAN
Women achievers in various fields were honoured at the World Working Women’s Day observation organised by Department of Women’s studies, Bharathidasan University, here on Friday.
Sister Stella, founder of Asisi Farm and Training Centre, Kanyakumari, was honoured for her social service and Thenmozhi, Tamil writer for her Tamil writings.
Karpaga Kumaravel, Syndicate member, Bharathidasan University, gave the awards to the achievers.
A. Puratchikodi, faculty, Department of Pharmaceutical Technology, Anna University, Chennai Regional Office, said sexist tendencies started even at the level of brining up children. Daughters were discriminated against sons. Preference for son still prevailed in spite of strides made in various fields.
“Women are afraid to even walk on the streets of Delhi after 8 p.m. and they openly concede this,” Ms. Puratchikodi said.
N. Manimekalai, Director and Head, Department of Women Studies, Bharathidasan University, said that inequality should be removed.
Prizes distributed
Prizes were distributed among winners in various competitions.
Students of Srimad Andavan Arts and Science College here won the first prize for group dance.
Students of Chettinad College of Arts and Science College won the second prize, and Bharathidasan University Constituent College at Lalgudi won the third prize.
Printable version | Mar 28, 2015 10:08:44 AM | http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/women-achievers-felicitated/article7042150.ece

Wednesday, March 11, 2015

விஜயசங்கர் : வெளிச்ச விநியோகிஃ பிரண்ட்லைன் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் 
திரு விஜயசங்கர் அவர்களுக்கு இன்று ( 12.03.2015)   பிறந்தநாள் என அறிந்து காலையில் மொபைலில்  அழைத்து வாழ்த்தினேன்.  

விஜய் என நண்பர்களால் பிரியமாக அழைக்கப்படும் விஜயசங்கர் ஊடகத் துறையில் இருக்கும் அபூர்வ மனிதர்களில் ஒருவர். ஆங்கிலம் தமிழ் என இரண்டு மொழிகளிலும் சரளமாகவும் ஆழமாகவும் எழுதக்கூடியவர் . வகுப்புவாத இருள் அடர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இடதுசாரி பின்புலத்தோடு பொறுப்பும் கடப்பாடும் கொண்டவர்கள் ஊடகத் துறையில் இருப்பது அவசியம். விஜயசங்கரின் தந்தை ராமச்சந்திரன்  நாடறிந்த கம்யுனிஸ்ட் தலைவர். தியாகத்துக்குப் பெயர்போனவர்.அந்த அர்ப்பணிப்பின் வாரிசு இவர்.

விஜயசங்கர் பொறுப்பேற்றதற்குப் பிறகு ஃ பிரண்ட்லைன் பத்திரிக்கை மேலும்  மாறியிருக்கிறது.அதிகம் பிரதிகள்  விற்பதாகவும் அறிந்தேன்.  இந்திய அளவில் நேர்த்தியான முறையில் அடர்த்தியான சிந்தனைகளையும்,ஆய்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவரும் ஒரே பத்திரிக்கை இதுதான்.விஜயசங்கரின் உழைப்பு ஒவ்வொரு இதழிலும் வெளிப்படக் காணலாம் . 

ஃ பிரண்ட்லைன் என்பது ஒரு பத்திரிக்கை மட்டுமல்ல,இயக்கம். அதன் ஆசிரியராக இருப்பது வேலை மட்டுமல்ல ,இருண்டுவரும் காலத்தில் வெளிச்சத்தை விநியோகிக்கும் அரிய பணி . அந்தப் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் விஜயசங்கர் மன, உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் வாழ்ந்து இந்த சமூகத்துக்குப் பங்களிப்புச் செய்ய வாழ்த்துகிறேன் . 

Tuesday, March 10, 2015

எலைன் ஷொவால்ட்டரின் கோட்பாடும் அம்பையின் படைப்புகளும்பெண் எழுத்துகள் என்ற தலைப்பில் 10.03.2015 அன்று திருச்சியில் மணற்கேணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியை லாரா கலந்துகொண்டு அம்பையின் படைப்புகள் குறித்துப் பேசினார். 

பெண்ணிய சிந்தனையாளர் எலைன் ஷொவால்ட்டர் பெண்ணிய எழுத்துகளை மூன்று கட்டங்களாகப் பிரிக்கிறார். ஆண் எழுத்தாளர்களைப் பின்பற்றி எழுதும் Feminine  என்ற முதல் கட்டம்; பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் feminist என்ற இரண்டாவது கட்டம்; ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துவதே போதுமெனக் கருதுவதை விடுத்து பெண்கள் தம்மை உள்முகமாக ஆய்வு நோக்குடன் பரிசீலிக்கும் female என்ற மூன்றாவது காலகட்டம். இந்த மூன்று காலகட்டங்களும் அம்பையின் படைப்புகளில் எப்படி வெளிப்படுகின்றன என்பதை பேராசிரியை லாரா விளக்கினார். 

இந்த கருத்தரங்கில் இஸபெல் அலெண்டெ படைப்புகள் குறித்து அசதா, மஹாஸ்வேதா தேவியின் படைப்புகள் பற்றி ரவிக்குமார், ஆர். சூடாமணியின் படைப்புகள் குறித்து ச. தமிழ்ச்செல்வன், தேன்மொழியின் படைப்புகள் குறித்து பேராசிரியை சுபா ஆகியோர் பேசினர்.