Saturday, April 11, 2015

திருச்சியில் மணற்கேணி விற்பனையகம்

திருச்சியில் மணற்கேணி விற்பனையகம் 
===================
மணற்கேணி நூல் விற்பனையகம் இன்று திருச்சி கே கே நகர் இந்தியன் வங்கிக் காலனியில் திறந்துவைக்கப்பட்டது. அ.க.தமிழாதன் முன்னிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் டாக்டர் மணிமேகலை அவர்கள் விற்பனையகத்தைத் திறந்துவைத்தார். தேன்மொழி, பூங்கொடி, பூங்கோதை ஆகியோர் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தனர். மாணவர் அம்பேத்கர் நூல்களைப் பெற்றுக்கொள்ள பெரம்பலூர் கிட்டு விற்பனையைத் துவக்கிவைத்தார். 

பஞ்சு, கோபாலகிருஷ்ணன், பிரபாகரன், அரசு, கனியமுதன், நிலவன், இளம்பரிதி முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

மணற்கேணி பதிப்பக நூல்களை இங்கே வாங்கலாம். தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்களின் நூல்களும் விரும்புவோருக்கு வாங்கித் தரப்படும். 

முகவரி : 

மணற்கேணி விற்பனையகம்
10, காந்தி காம்ப்ளெக்ஸ்
ஷரோன் பேக்கரி எதிரில்
5 ஆவது குறுக்குத் தெரு
இந்தியன் வங்கி காலனி 
கே கே நகர்
திருச்சி

தொடர்புக்கு : 
கோபாலகிருஷ்ணன் 97-91-557360

2 comments:

  1. அன்புடையீர் வணக்கம்! அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” – நூல் விமர்சனம் – என்ற தலைப்பினில் ஒரு பதிவினை, எனது
    வலைத்தளத்தில் http://tthamizhelango.blogspot.com/2015/12/blog-post_13.html வெளியிட்டுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும்.

    ReplyDelete